ஆர்ப்பாட்டத்தால் மூடப்பட்ட வீதி - நீர்த்தாரை பிரயோகத்திற்கு தயாராக குவிக்கப்பட்டுள்ள படையினர்!

#SriLanka #Parliament #Protest #Sri Lankan Army
PriyaRam
2 years ago
ஆர்ப்பாட்டத்தால் மூடப்பட்ட வீதி - நீர்த்தாரை பிரயோகத்திற்கு தயாராக குவிக்கப்பட்டுள்ள படையினர்!

பத்தரமுல்லை, பொல்துவ சந்திக்கு அருகில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக, நாடாளுமன்றத்திற்கான பிரதான வீதியை பொலிஸார் மூடியுள்ளனர்.

ஆசிரியர்கள், அதிபர்கள் உட்பட பல கல்வித்துறை ஊழியர்களின் தொழிற்சங்கங்களால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பள உயர்வு கோரிக்கையை முன்னிறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

images/content-image/2023/12/1701774502.jpg

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் போதிய நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பாதுகாப்பு கருதி அதிக படையினர் ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். 

அத்துடன், நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்வதற்கும் தயார் நிலையில் படையினர் உள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!