வாள்வெட்டு தாக்குதல் நடத்தி விட்டு வானில் தப்பிச் சென்ற கும்பல்! யாழில் பதற்றம்

#SriLanka #Jaffna #Police #Crime
Mayoorikka
2 years ago
வாள்வெட்டு தாக்குதல் நடத்தி விட்டு வானில் தப்பிச் சென்ற கும்பல்! யாழில் பதற்றம்

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பகுதியில் ஹயஸ் வானில் வந்த இனந்தெரியாத குழு மோட்டார் சைக்கிள் வந்த இளைஞர் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது.

 இதன்போது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

 தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் குறித்த வன்முறை சம்பவம் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. பொலிஸ் நிலையம் முன்பாக காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மோட்டார் சைக்கிளில் வாள்வெட்டு குழுவை துரத்தி சென்ற போதும் ஹயஸ் வானில் குறித்த குழு தப்பிச் சென்றுள்ளது.

 ஹயஸ் வானை நோக்கி பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாகவும் தெரியவருகிறது.

 சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 சம்பவம் தொடர்பாக தெல்லிப்பழை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!