பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனை சந்தித்தார் ரணில்!

#SriLanka #Ranil wickremesinghe #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனை சந்தித்தார் ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கும் இடையில் இருதரப்பு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 துபாயில் நடைபெறும் COP 28 பிரதான மாநாட்டில் கலந்துகொள்ள அங்குச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது பிரான்ஸ் ஜனாதிபதியை சந்தித்ததாக கூறப்படுகிறது. 

இதன்போது இலங்கையின் பொருளாதாரத்தில் பசுமையான மாற்றத்திற்கான யோசனைகள் பரிமாறப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்துடன் (IORA) பிரான்சின் உறவை வலுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

சர்வதேச காலநிலை மாற்ற பல்கலைக்கழக திட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு பிரான்ஸ் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!