கனடாவில் போலி நாணயக்குற்றிகள் வலம் வருவதாக எச்சரிக்கை
#Canada
#Lanka4
#லங்கா4
#Canada Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
1 year ago

கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கியூபெக்கில், ஏற்கனவே 26000 நாணயக் குற்றிகள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் போலி நாணயக்குற்றிகள் ஒன்றாரியோவில் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டு கனடாவில் இந்த நாணயக் குற்றிகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு டொலர் பெறுமதியான நாணயக் குற்றிகளே இவ்வாறு போலியாக தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோவிலும் கியூபெக்கிலும் மீட்கப்பட்ட போலி நாணயக் குற்றிகள் ஒரே இடத்தில் உற்பத்தி செய்யப்பட்டவை என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த இரண்டு நாணயக் குற்றிகளிலும் அச்சிடப்பட்ட ஆண்டாக 2012ம் ஆண்டு பொறிக்கப்பட்டுள்ளது.



