இலங்கையில் சடுதியாக உயர்ந்த தேசிக்காயின் விலை
#SriLanka
#prices
#Food
#sri lanka tamil news
#Market
#Lime
Prasu
2 years ago
இலங்கை சந்தையில் ஒரு கிலோகிராம் தேசிக்காய் 3000 ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டின் பல பகுதிகளில், தற்போது தேசிக்காய்க்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சில பகுதிகளில் 100 கிராம் தேசிக்காய் 100 மற்றும் 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் சந்தை தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, தேசிக்காயின் விலை அதிகரித்துள்ள நிலையில், வல்லாரைக் கீரையின் விற்பனையும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.