பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விநியோகிக்கப்படவிருந்த போதைப்பொருட்கள் மீட்பு!
#SriLanka
#Sri Lanka President
#Arrest
#Police
#Crime
#drugs
#Drug shortage
#School Student
Mayoorikka
2 years ago
கிழக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து பாரியளவிலான போதைப்பொருள் வியாபாரி ஒருவரை வாழச்சேனை பிரண்டாரச்சேனை பிரதேசத்தில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரை கைது செய்யும் போது, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அவரிடம் 2,500 போதைப்பொருட்களை கண்டுபிடித்துள்ளனர்.
காரில் பயணித்த போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர் மட்டக்களப்பு அரசடி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவராவார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.