ஜெரோம் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம்!

#SriLanka #Sri Lanka President
Mayoorikka
2 years ago
ஜெரோம் பெர்னாண்டோ  குற்றப்புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம்!

சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

 பௌத்த மதத்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு, சிங்கப்பூர் சென்ற போதகர் ஜெரோம் பெர்னாண்டோ புதன்கிழமை (29) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

 போதகர் ஜெரோம் பெர்னாண்டோ பௌத்த மதத்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட நிலையில், நாட்டைவிட்டு வெளியேறியிருந்தார்.

 இதன் பின்னர் நீதிமன்றத்தால் அவரை கைதுசெய்யுமாறு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், பின்னர் அவர் இலங்கை வரும் போது கைதுசெய்ய வேண்டாமெனவும் நாட்டுக்கு வருகை தந்து 48 மணிநேரத்தில் வாக்குமூலமொன்றை வழங்க வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

 இந்நிலையில், போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று வியாழக்கிழமை (30) காலை வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!