சுரங்க தொழிலாளர்களை மீட்டதற்கு பாராட்டு தெரிவித்த ஆஸ்திரேலிய பிரதமர்
#India
#PrimeMinister
#Australia
#Accident
#Congratulations
#Rescue
#Mine
#Workers
Prasu
1 year ago

உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் 17 நாட்களாக சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் நேற்று முன்தினம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மீட்பு பணியை வெற்றிகரமாக நிறைவு செய்த மீட்பு குழுக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்கப்பட்டது இந்தியாவின் அற்புதமான சாதனை என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "இது இந்திய அதிகாரிகளின் அற்புதமான சாதனை. ஆஸ்திரேலியாவை சேர்ந்த சர்வதேச சுரங்க நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் மீட்பு பணியில் பங்கு வகித்தது பெருமைக்குரியது" என்று அந்தோணி அல்பானீஸ் பதிவிட்டுள்ளார்.



