35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை அவசியம்

#SriLanka #Healthy #ADDA #shelvazug #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Lanka4
3 hours ago
35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை அவசியம்

35 வயதுக்கு மேற்பட்டவர் கள் ஆண்டுக்கு இரு தடவைகள் மருத்துவப் பரிசோதனை செய் வது அவசியம் என்று யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டத் தில் தொற்றா நோயினைக் கட் டுப்படுத்தல் தொடர்பான மாவட்ட செயலணி ஸ்தாபித் தல் கூட்டமானது யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன் தலைமையில் நேற்று முன்தினம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடை பெற்றது இதன்போது மருத்துவர் கேதீஸ்வரன் மேலும் கூறுகையில், "பாடசாலைகளிலும் அலுவ லகங்களிலும் ஆரோக்கியமான மேம்பாட்டு அறை இருத்தல் வேண்டும்.

35 வயதைக் கடந்தவர்கள் ஆண்டுக்கு இரண்டு தடவைகள் மருத்துவ பரிசோதனை செய் வது அவசியம். பொதுமக்கள் அருகில் உள்ள மருத்துவமனை களில் அல்லது சுகாதார நிலை யங்களில் மருத்துவ பரிசோத னைகளை மேற்கொண்டு தமக் குரிய தனிப்பட்ட மருந்துவப் புத்தகத்தை பேண முடியும். அலுவலகங்கள், நிறுவனங் கள் கேட்கும் பட்சத்தில் இல வச மருத்துவ பரிசோதனைகள் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் ஊடாக மேற் கொள்ளப்படும்.

அலுவலகங்களில் புகைத்தல் தடைசெய்யப்பட்ட பிரதேசம் என காட்சிப்படுத்தப்பட்ட பலகை இருத்தல் வேண்டும் என்பதுடன் அலுவலகங்களுக்கு வருபவர்கள் வெற்றிலையுடன் (வெற்றிலையை மென்றுகொண்டு) வருவதையும் அனுமதிக்கக் கூடாது.

வீதி விபத்துக்களைத் தடுத் தல் வேண்டும் என்பதுடன், பாதுகாப்பற்ற கிணறுகளால் ஏற்படும் ஆபத்துக்கள் மற்றும் நீரில் மூழ்கி இறப்பது அதிகரித் துள்ளதால் அது தொடர்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் அவசியம். அத்தோடு, ஆபத் தானது என்று அடையாளப்ப டுத்தல்கள் அல்லது தடுப்புகள் ஏற்படுத்துவது அவசியம்.

கடந்த ஆண்டில் விசர்நாய் கடியால் ஒருவருக்கு இறப்பு ஏற்பட்டது. பொதுமக்களுக்கு இது தொடர்பிலான விழிப்பு ணர்வு அவசியம்”- என்றார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!