சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ரயிலுடன் மோதி விபத்து!

#SriLanka #Accident #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ரயிலுடன் மோதி விபத்து!

சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று இன்று (29.11) அதிகாலை ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வாஸ்காடு பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போதுதே குறித்த விபத்து சம்பவம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இவ்விபத்தில் சுற்றுலா பயணிகள் இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகிய நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். 

 சுற்றுலாப் பயணிகள் இரவு 9 மணியளவில் செக் குடியரசிற்கு புறப்பட இருந்த விமானத்தை பிடிப்பதற்காக சென்றுகொண்டிருந்த நிலையில் அளுத்கமவில் இருந்து ஹலவத்தை நோக்கி பயணித்த ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர். 

விபத்தில் பேருந்தின் பின்புறம் சேதமடைந்ததுடன், ரயிலுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரயில் பயணிகள் மருதானை நோக்கி செல்லும் மற்றொரு ரயிலில் அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!