நடிகை வனிதா விஜயகுமார் மீது கொடூர தாக்குதல்

நடிகர் விஜயகுமார் மகளும், நடிகையுமான வனிதா மர்மநபர் ஒருவர் திடீரென தாக்கியதாக வலைதளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, நான் பிக்பாஸ் நிகழ்ச்சி விமர்சனத்தை முடித்து விட்டு இரவு உணவு சாப்பிட்டுவிட்டு என் காரில் இறங்கி நடந்துசென்று கொண்டிருந்தேன்.
காரை என்னுடைய சகோதரி சவுமியா வீட்டு அருகே இருட்டான பகுதியில் நிறுத்தினேன். அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு மர்ம நபர் பிரதீப்புக்கு ரெட்கார்டு கொடுக்கிறீங்களா? என கேட்டார். அதுக்கு நீ வேற சப்போர்ட்டுக்கு வர்றியா? என சொல்லி என் முகத்தில் பலமாக தாக்கிவிட்டு ஓடிவிட்டார்.
இதனால் காயம் அடைந்து ரத்தம் வழிந்தது. நள்ளிரவு 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததால் என் அருகில் யாரும் இல்லை. என் சகோதரியை கீழே வரும்படி அழைத்த நிலையில் அவர் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்யும் படி தெரிவித்தார். ஆனால் நான் அவளிடம் பொலிஸ் புகார் தெரிவிப்பதில் நம்பிக்கை இல்லை என தெரிவித்தேன்.
காயத்திற்காக முதலுதவி செய்துவிட்டு கோபத்துடன் வெளியேறி தாக்கியவரை அடையாளம் காண நினைத்தேன். முடியவில்லை. அந்த மர்ம நபர் பைத்தியகாரத் தனமாக சிரித்தது என் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
நான் திரையில் தோன்றும் அளவுக்கு உடல் நலத்துடன் இல்லாததால் ஓய்வு எடுத்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
வனிதாமீது தாக்குதல் நடத்திய சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




Bravely posting my attack . #BiggBoss7Tamil is just a game show on tv . I don’t deserve to go thru this pic.twitter.com/X6rI8io4GB
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) November 26, 2023