இலங்கை சவுதி இடையேயான பொருளாதார வலுவாக்கல் தொடர்பான முக்கிய கலந்துரையாடல்!

#SriLanka #Ranil wickremesinghe
PriyaRam
2 years ago
இலங்கை சவுதி இடையேயான பொருளாதார வலுவாக்கல் தொடர்பான முக்கிய கலந்துரையாடல்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சவுதி அரேபிய பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சர் பைசல் F.அலிப்ரஹிம் (Fisal F.Alibrahim) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது இலங்கை மற்றும் சவுதி அரேபியா இடையில் நிலவும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும், ஆடை மற்றும் சுற்றுலாத்துறைகளை மேம்படுத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

images/content-image/2023/11/1701146139.jpg

மேலும் மேற்கு ஆசியா உள்ளிட்ட ஆசிய பிராந்தியத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாக இதன்போது குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிராந்திய விவகாரங்கள் தொடர்பிலும் அமைச்சருடன் கலந்துரையாடினார்.

இதேவேளை இலங்கையின் சுற்றுலா மற்றும் விவசாயத் துறைகளை நவீனமயமாக்கும் வேலைத்திட்டம் குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி, அந்த துறைகளில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பிலும் தௌிவூட்டியமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!