பாடசாலை மாணவர்களுக்கு கிடைக்கவுள்ள வரப்பிரசாதம்: கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்
#SriLanka
#students
#education
#School Student
Mayoorikka
2 years ago
பாடசாலை மாணவர்களுக்கான காலணி வவுச்சர்கள் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் நேற்று உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வறுமையில் உள்ள மற்றும் அநாதரவாக கைவிடப்பட்ட மாணவர்களுக்கு இந்த காலணி வவுச்சர்கள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, 7 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்களுக்கு இந்த வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளன என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.