போலியான துவாரகாவை அறிமுகம் செய்த சுவிஸ் கிளை!
#SriLanka
#Death
#Tamil People
Mayoorikka
1 year ago

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகளான துவாரகா எனக் கூறி போலியான துவாரகாவை தேசிய மாவீரர் நாளான இன்று விடுதலைப் புலிகள் எனக் கூறும் சுவிஸ் கிளை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே அறிவித்தது போல் இன்றைய தினம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மக்கள் துவாரகா என கூறி செயற்கை நுண் அறிவு மூலம் ஒரு துவாரகாவை உருவாக்கி அறிமுகம் செய்து உரையாற்ற வைத்துள்ளனர்.
2008 ஆம் ஆண்டு தேசிய தலைவர் பிரபாகரனின் உரையை தொடர்ந்து 15 ஆண்டுகளின் பின்னர் இன்றைய தினம் பிரபாகரனின் மகள் துவாரகா என கூறி இவர் உரையாற்றுகின்றார்.,
இதேவேளை சில இலங்கை தமிழ் அமைப்புகள் மாவீரர் நாளில் பிரபாகரன் மகள் துவாரகா பேசும் வீடியோவை ஒளிப்பரப்ப முடிவு செய்துள்ளதாக ஏற்கனவே புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



