நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் தொன் கணக்கான பிளாஸ்ரிக்!

#SriLanka
PriyaRam
7 months ago
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் தொன் கணக்கான பிளாஸ்ரிக்!

வருடத்திற்கு 45,000 தொன் பிளாஸ்டிக்கை நாட்டிற்கு இறக்குமதி செய்ய 27,000 கோடி ரூபா செலவிடப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார்.

இந்த பிளாஸ்டிக் மக்குவதற்கு சுமார் 700 வருடங்கள் ஆகும் என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், ஏழரை லட்சம் டன் பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்யாவிட்டால் இன்னும் பல வருடங்களில் இந்த நாட்டில் மண்ணே இருக்காது என்றார்.

மறுசுழற்சி நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படாவிட்டால் கடலில் உள்ள மீன்களை விட அதிக பிளாஸ்டிக் துண்டுகள் கடலில் மிதக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

images/content-image/2023/11/1701083816.jpg

வருடமொன்றுக்கு நான்கரை இலட்சம் தொன் பிளாஸ்டிக் இறக்குமதி செய்யப்பட்டாலும் அதில் மீண்டும் சுமார் 144,000 தொன்கள் சேகரிக்கப்படுவதாகவும் அவ்வாறு செய்தாலும் ஐம்பதாயிரம் டன்களுக்கும் குறைவான பிளாஸ்டிக் மீள்சுழற்சிக்கு பயன்படுத்தப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

நாட்டின் நீரோடைகள் மற்றும் ஆறுகளில் சாலைகளின் இருபுறங்களிலும் 400,000 தொன் பிளாஸ்டிக் கடலில் கலக்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.