பிரான்ஸ் எரிபொருள் நிலையத்தில் டீசல் திருடிய இருவர் கைது

#Arrest #France #Robbery #Lanka4 #லங்கா4 #பிரான்ஸ் #France Tamil News #Tamil News
Mugunthan Mugunthan
2 months ago
பிரான்ஸ் எரிபொருள் நிலையத்தில் டீசல் திருடிய இருவர் கைது

கணனியில் குறைபாடு இருப்பதை அறிந்த கொள்ளையர்கள் இருவர் நிரப்பு நிலையம் ஒன்றில் இருந்து கிட்டத்தட்ட 19,000 லிட்டர் டீசலை திருடியுள்ளனர்.

 இச்சம்பவம் பிரெஞ்சுத் தீவான Oléron இல் இடம்பெற்றுள்ளது. Dolus நகரில் உள்ள Intermarché நிரப்பு நிலையத்தில் டீசல் கொள்ளையிட்ட தந்தை-மகன் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 குறித்த இருவரும் கடந்த இரண்டரை மாதங்களில் 18,800 லிட்டர் டீசலினை திடியுள்ளனர். நிரப்பு நிலையத்தில் உள்ள கணனியில் பழுது இருப்பதை அறிந்த அவர்கள், ஒரு தடயமும் இல்லாமல் டீசலை பகுதி பகுதியாக திருடியுள்ளனர்.

images/content-image/1701083370.jpg

 நிரப்பு நிலையத்தின் முகாமையாளர் விற்பனை இலாபம் தொடர்பாக சந்தேகம் கொண்டதுடன், அதனை கண்டுபிடிக்கவும் முடியாமல் தவித்துள்ளார். பின்னர் ஒருவழியாக கண்காணிப்பு கமராக்களை சோதனையிட்டதில், அங்கு எரிபொருள் நிரப்ப வந்த வாகனம் ஒன்றின் மீது சந்தேகம் கொண்டனர்.

 பின்னர் வாகனம் எப்போதெல்லாம் அங்கு வந்துள்ளது என்பதை கண்டறிந்து அதன் காட்சிகளையும் பார்வையிட்டதில், குறித்த வாகனத்தைச் செலுத்தி வந்த இருவர் மீது சந்தேகம் எழுந்தது.

 அதன் பின்னரே கணனியில் பழுது இருப்பதை முகாமயாளர் கண்டுபிடித்ததுடன், அதனை தந்தை-மகனான இரு திருடர்களும் தமக்கு சாதமாக பயன்படுத்தியுள்ளமை தெரியவந்தது. பின்னர் காவல்துறையினர் அழைக்கப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இதுவரை ₤30,000 யூரோக்கள் பெறுமதியான டீசலினை திருடியுள்ளமை தெரியவந்தது.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு