நீதிமன்றின் உத்தரவை மீறி துயிலும் இல்லத்தில் பொலிஸார் அடாவடி!
#SriLanka
#Police
#Court Order
#Mullaitivu
PriyaRam
2 years ago
மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடங்குவதற்கு சில மணி நேரங்கள் உள்ள நிலையில் முல்லைத்தீவு அலம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் கொடிகளை கிழித்தெறிந்து பொலிஸார் அட்டகாசம் செய்துள்ளனர்.
கொடியேற்றலாம், கார்த்திகை மலரைப் பயன்படுத்தலாம், துயிலும் இல்லம் என்ற சொல்லை எந்தக் காட்சிகளிலும் பயன்படுத்தலாம், பதாகைகளை பயன்படுத்தலாம் என முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இன்று காலை வழங்கிய உத்தரவை பொலிஸார் புறக்கணித்துள்ளனர்.