ரணிலின் அதிரடி - பறிக்கப்பட்டது ரொஷானின் அமைச்சுப் பதவி!
#SriLanka
#Ranil wickremesinghe
PriyaRam
2 years ago
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
பதவி நீக்கத்துக்கான கடிதம் ஜனாதிபதி செயலகத்தினால் அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றிருந்த போதே விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்ட பிறகு முதல் முறையாக அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.