நூதனமாக கடத்தப்பட்ட போதைப்பொருள் சிக்கியது எப்படி?

#SriLanka #Arrest #Police #drugs
PriyaRam
1 year ago
நூதனமாக கடத்தப்பட்ட போதைப்பொருள் சிக்கியது எப்படி?

ஒலுபொடுவ பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவர் கைக்கடிகாரத்தின் பின் அட்டையினுள் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்ததமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரை கைதுசெய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது போதைப்பொருள் கடத்தும் புதிய முறை தொடர்பில் அறியக் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, சந்தேக நபர் ஹெரோயின் பொதிகளை கொண்டு செல்வதாக மொரகஹஹேன பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபரை கைது செய்து தீவிர சோதனைக்கு உட்படுத்திய போதிலும் போதைப்பொருள் கண்டுபிடிக்க முடியவில்லை.

images/content-image/2023/11/1701079383.jpg

சந்தேகத்தின் பேரில், கைக்கடிகாரத்தின் பின் அட்டையை அகற்றியபோது, ​​மூன்று போதைப்பொருள் பொதிகள் கவனமாக பொதி செய்யப்பட்டிருந்ததை பொலிஸார் கண்டுபிடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

பன்னிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பல்வேறு பகுதிகளுக்கு போதைப்பொருள் பொதிகளை விநியோகித்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த சந்தேக நபர் பணத்திற்காக பெண்களை விற்கும் இடமொன்றின் முகாமையாளர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

சந்தேக நபர் ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன் மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!