பாடசாலை மாணவர்களுக்கு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ள கல்வி அமைச்சர்!
#SriLanka
#School
#Parliament
#Susil Premajayantha
#School Student
PriyaRam
1 year ago

காலணி வவுச்சர் விநியோகம் டிசம்பர் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட சபை உறுப்பினர் ஹேஷா விதானகே எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வவுச்சர் விநியோகம் எதிர்வரும் 27ஆம் திகதி நிறைவடையும் என்றும் 740,000 சிறார்களுக்கு வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இதற்காக மிகவும் கஷ்டமான மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.



