மட்டக்களப்பில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த நீதிமன்றம் அனுமதி!

#SriLanka #Court Order #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
மட்டக்களப்பில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த நீதிமன்றம் அனுமதி!

மட்டக்களப்பு மாவடிமுன்மாரி,  தாண்டியடி,  தரவை மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவேந்தல் செய்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 

அத்துடன் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் சின்னங்கள் கொடிகள் படங்கள் பயன்படுத்த கூடாது  என்றும் நீதிமன்றம் இன்று (27.11) உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் இன்று நினைவேந்தல் செய்வதை தடைசெய்ய கோரி வாழைச்சேனை,  வவுணதீவு,  சந்திவெளி,  கொக்கட்டிச்சோலை, வாகரை,  பொலிசார் இன்நாள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் அரசியல் கட்சிகளின் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக தடை உத்தரவு பெற்றிருந்தனர். 

இந்த நிலையில் இந்த தடை உத்தரவுக்கு எதிராக இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னனனியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன், கட்சி தேசயி அமைப்பாளர் சுரேஸ் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன், பா.அரியேந்திரன் ஆகியோர்  7 சட்டத்தரணிகள் மூலம் நீதிமன்றில் முன்நகர்வு பத்திரம் விண்ணப்பித்தனர். 

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான் இறந்தவர்களுக்கு நினைவேந்தல் செய்ய உரிமையுண்டு எனவும் குறித்த மாவீரர் துயிலும் இல்லங்களில் மக்கள் சுயமாக நினைவேந்தலை அனுஸ்டிக்க முடியும் எனவும் கூறி அனுமதியளித்ததுடன்,  விடுதலைப்புலிகளின் சின்னங்கள், கொடிகள்,  புகைப்படங்கள் பயன்படுத்தகூடாது எனவும் உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.

  எனவே மக்கள் மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு வருகை தந்து நினைவேந்தலில் அலை அலையாக திரண்டு ஈடுபடுமாறு தமிழ்தேசிய மக்கள் முன்னணி நா.உறுப்பினர் எஸ்.கஜேந்திரன்,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின்களான ஞா.சிறிநேசன், பா.அரியேந்திரன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!