கனடாவில் பறவைக்காய்ச்சலுக்கு ஐந்து மில்லியன் கோழிகள் உயிரிழப்பு
#Canada
#Lanka4
#லங்கா4
#bird species
#பறவை_இனங்கள்
#Flu
#Canada Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
1 year ago
கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில் சுமார் ஐந்து மில்லியன் கோழிகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பறவைக் காய்ச்சல காரணமாக இவ்வாறு கோழிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பறவைக் காய்ச்சல் பரவுகை காரணமாக மாகாணம் முழுவதிலும் பெரும் பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன. பண்ணை உரிமையாளர்கள் இதனால் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பறவைக் காய்ச்சல் தொற்றை கட்டுப்படுத்த முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மாகாணத்தின் பறவைப் பண்ணைகளில் சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நோய்த் தொற்று பரவுவதனை கட்டுப்படுத்த பல வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருவதூக தெரிவிக்கப்படுகின்றது.