கனடாவில் இந்தப்பொருட்களுக்கு இறக்குமதித் தடை
கனடாவில் யானை தந்தங்கள் மற்றும் காண்டாமிருகக் கொம்புகள் ஆகியனவற்றை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் அழிவினை சந்தித்து வரும் யானைகள் மற்றும் காண்டாமிருகங்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. காண்டாமிருகங்களின் கொம்புகள் மற்றும் யானைகளின் தந்தங்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கும் இந்த தடை அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யானை தந்தங்கள் மற்றும் காண்டாமிருக கொம்புகள் நாட்டுக்குள் இறக்குமதி செய்வதற்கு விசேட அனுமதி அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க யானைகளும், காண்டாமிருகங்களும் அழிவடைந்து வருவதாகவும் உயிர்ப் பல்வகைமை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அடுத்த தலைமுறையினருக்கு யானைகள் காண்டாமிருகங்கள் என்பனவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக கனடாவின் சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் ஸ்டீபன் குயில்பியெல்ட் அறிவித்துள்ளார்.