100,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை!
பண்டிகை காலத்தை முன்னிட்டு 100,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ நேற்று (20.11) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இது குறித்து அறிவித்துள்ளார்.
இந்த தீர்மானத்தின் பிரகாரம் அடுத்த சில நாட்களில் அரிசியை விரைவில் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கீரி சம்பா மற்றும் சம்பாவிற்கு பதிலாக அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். அதன் மூலம் விலையை கட்டுப்படுத்த முடியாத பட்சத்தில் தொகையை அதிகரிப்பது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான விலையேற்றம் நீண்டகாலமாக பாரிய ஆலை உரிமையாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கான நிரந்தர தீர்வை வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர்மேலும் தெரிவித்தார்.