அங்குருவத்தோட்ட வயல் ஒன்றில் இனம்தெரியாத நபரின் சடலம் மீட்பு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
அங்குருவத்தோட்ட வயல் ஒன்றில் இனம்தெரியாத நபரின் சடலம் மீட்பு!

அங்குருவத்தோட்ட, வெனிவேல்பிட்டிய பிரதேசத்தில் வயல் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.  

நெல் வயல் ஒன்றில் உழவு இயந்திரத்தில் விழுந்து இரத்தக் காயங்களுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அங்குருவத்தோட்ட பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  

பொலிஸாரின் விசாரணைகளின் படி உயிரிழந்தவர் வெனிவெல்பிட்டிய, ஹல்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.  

இந்த சந்தேக மரணம் தொடர்பில் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஹொரணை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குருவாதொட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!