யாழில் கைதி ஒருவர் உயிரிழப்பு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
யாழில் கைதி ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த  கைதி ஒருவர் இன்று (19.11) உயிரிழந்துள்ளார்.

வட்டுக்கோட்டை சித்தங்கேணி பகுதியை சேர்ந்த 26 வயதான நாகராசா அலெக்ஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் சில நாட்களுக்கு முன்னர் திருட்டு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டப்பின் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ச்சியாக சிகிச்சைப் பெற்று வந்த குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மரண விசாரணை அதிகாரியின் அறிக்கை, சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கைக்கு பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உயிரிழந்தவரின் தாயார் கடந்த நவம்பர் 10 ம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளார்.

முறைப்பாட்டில் தனது மகன் வட்டுக்கோட்டை பொலிஸாரால் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டதாகவும் இதனாலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!