யாழில் - மன்னார் வீதியில் சாரதிகளுக்கு இடையிலான போட்டியில் விபத்தில் சிக்கிய பேருந்து!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
யாழில் - மன்னார் வீதியில் சாரதிகளுக்கு இடையிலான போட்டியில் விபத்தில் சிக்கிய பேருந்து!

யாழ்ப்பாணம்- மன்னார் பாதையூடாக பயணித்த தனியார் பேருந்து மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பத்தால் பயணிகள் யாரும் பாதிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.  குறித்த சம்பவம் நேற்று (18.11) இடம்பெற்றுள்ளது. 

images/content-image/1700396169.jpg

முழங்காவில் பகுதியை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றுடன் போட்டியிட்டு அந்த பேருந்தை முந்த முயற்சித்த வேளை நிலைதடுமாறி மரத்தின்மோதி விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த நிலையில் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பயணிகள் பேருந்தில் இருந்து இறக்கப்பட்டு வேறு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டதுடன் பேரூந்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

images/content-image/1700396191.jpg

தொடர்ச்சியாக மன்னார் யாழ்ப்பாணம், மன்னார் வவுனியா வீதிகளில் பேருந்து சாரதிகள் மக்களின் உயிர்களை மதிக்காது பேருந்துகளை போட்டி போட்டு செலுத்தும் சம்பவங்களும் அதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் சம்பவங்களும் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!