நாடாளுமன்றில் கிடைத்த அனுமதி - வழங்கப்பட்ட உயர் பதவிகள்!

#SriLanka #Parliament
PriyaRam
2 years ago
நாடாளுமன்றில் கிடைத்த அனுமதி - வழங்கப்பட்ட உயர் பதவிகள்!

அமைச்சின் செயலாளர் ஒருவர் உட்பட 6 புதிய நியமனங்களுக்கு நாடாளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அங்கீகாரம் கிடைத்திருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.*

இதற்கமைய, பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக கே.டி.என்.ஆர். அசோக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

images/content-image/2023/11/1700281452.jpg

அத்துடன், இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக கே.டி.செனவிரத்னவை நியமிப்பதற்கும், பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக எஸ்.ஆர்.பி. போகல்லாகமவை நியமிப்பதற்கும் உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம் சிங்கப்பூருக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக டீ.டீ.எம்.எஸ்.பி.திசாநாயக்கவும் பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கைத் தூதுவராக டபிள்யூ.கே.சி.வீரசுமனவும் நியமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!