சந்தர்ப்பம் வழங்குமாறு சர்வதேச கிரிக்கட் பேரவைக்கு இலங்கை கோரிக்கை!
#SriLanka
#Srilanka Cricket
#Cricket
#ICC
Mayoorikka
2 years ago
இலங்கை கிரிக்கெட் மீதான தடை தொடர்பில் சர்வதேச கிரிக்கட் பேரவையுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் இராஜாங்க அமைச்சர் அலி சப்ரி தலைமையில் அமைச்சரவை உபகுழுவை நியமித்தார். அமைச்சர்களான டிரான் அலஸ், மனுஷ நாணயக்கார மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோர் அதில் உள்ளடங்குகின்றனர்.
இலங்கை கிரிக்கெட் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதங்களை புறந்தள்ளி அனைவரும் பாராளுமன்றத்தில் செயற்பட வேண்டும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.