வரவு செலவுத் திட்ட முன்மொழிவினால் மகிழ்ச்சியடைந்த டயானா கமகே!

#SriLanka #Sri Lanka President #Parliament #Ranil wickremesinghe #budget
Mayoorikka
2 years ago
வரவு செலவுத் திட்ட முன்மொழிவினால் மகிழ்ச்சியடைந்த டயானா கமகே!

மதுபானக் கடைகள் மற்றும் மதுபானசாலைகளுக்கு அதிக நேரம் திறந்திருக்கும் முறைமையை அறிமுகப்படுத்துவதற்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வரவேற்றுள்ளார்.

 சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்கும் வகையில் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பார்கள் மற்றும் மதுபானக் கடைகள் அதிகளவு நேரம் திறந்திருக்கும் முறையை அறிமுகப்படுத்த ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார். 

சுற்றுலா ஊக்குவிப்பு செயற்பாடுகள் தொடர்பான ஒழுங்குமுறைகள் மற்றும் மென் மதுபான உரிமங்களுக்கான புதிய கொள்கையொன்றை திருத்துவதற்கான யோசனையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்மொழியப்பட்டது.

images/content-image/2023/11/1699941315.jpg

 எமது சகோதர ஊடகமான டெய்லி மிரர் இராஜாங்க அமைச்சரைத் தொடர்பு கொண்ட போது, ​​"இந்த முன்மொழிவு குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் இலங்கையில் சட்டவிரோதமான மதுபான விற்பனையை நிறுத்துவதற்கான ஒருவித முறைமை இருக்க வேண்டும் " என அவர் தெரிவித்தார்.

 மதுபானக் கடைகள் மற்றும் மதுபானசாலைகளை மூடும் நேரத்தை நீடிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த அதேவேளை, அவை 24 மணி நேரமும் திறந்திருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!