2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை! ஒரே பார்வையில்: பல புதிய திட்டங்கள் அறிவிப்பு (updates)

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe #budget
Mayoorikka
2 years ago
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை!  ஒரே பார்வையில்: பல புதிய திட்டங்கள் அறிவிப்பு (updates)

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தடம் புரண்டிருந்த இலங்கையின் பொருளாதாரத்தை கடந்த வருடத்தில் மீண்டும் சரியான பாதையில் தூக்கி நிறுத்த முடிந்ததாகவும், அதற்காக மக்கள் கடுமையாக உழைத்த போதும், சில தரப்பினர் நாட்டை பின்நோக்கி இழுக்க முயற்சித்ததாகவும் குறிப்பிட்டார்.

 கற்பனைக் கதைகளால் நாட்டை முன்கொண்டு செல்ல முடியாது எனவும், நீண்ட காலமாக அரசியல் கட்சிகள் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளின் இறுதி முடிவு, நாட்டை வங்குரோத்து அடையச் செய்ததாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, துரதிஷ்டவசமாக நாட்டில் உள்ள சில தரப்பினர் இதனை இன்னும் புரிந்து கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்

 அரச ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு...

 சம்பள உயர்வை விருப்பப்படி செய்ய முடியாது. வரி வருவாயில் 35% அரசாங்க சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க செலவிடப்படுகிறது.

 அரசியல் நோக்கங்களுக்காக மாயைகளைப் பரப்புவதை நிறுத்துமாறும், அரசியலை விட நாட்டைப் பற்றி சிந்தித்து நாட்டை உயர்த்துவதற்கு அனைவரும் தம்மை உண்மையாக அர்ப்பணிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

பொருளாதார நரகத்தில் வீழ்ந்துவிடாமல் முன்நோக்கிச் செல்வதற்கு அடித்தளம்

 இதுவரையான பயணத்தின் வெற்றிக்கு அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டமே காரணம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, 

அதன் ஊடாக 2022 ஆம் ஆண்டைப் போன்று பொருளாதார நரகத்தில் வீழ்ந்துவிடாமல் முன்நோக்கிச் செல்வதற்கு அடித்தளமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

 *இது தேர்தல் பட்ஜெட் அல்ல, எதிர்காலத்தையும் நாட்டின் எதிர்காலத்தையும் கட்டியெழுப்பும் பட்ஜெட்

*அரச ஊழியர்களுக்கு 10,000 ஆல் அதிகரிப்பதாக ஜனாதிபதி அறிவிப்பு

*ஓய்வூதியகாரர்களுக்கு 2,500 ரூபா அதிகரிப்பு

 * அரச ஊழியர்களுக்கு விசேட கடன் வழங்க ஜனாதிபதி முடிவு

*60 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3,000 ரூபா கொடுப்பனவு

* கர்ப்பிணிகளுக்கான மாதாந்த கொடுப்பனவு அதிகரிப்பு

* வீட்டு உரிமைகள் அவர்களிடமே வழங்கப்படும்...

* ஊனமுற்ற நபர்கள், CKDU நோயாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான நன்மை திட்டங்களுக்கு 205 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

* 2024 பட்ஜெட்டில் இருந்து சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (SME ) வளர்ச்சிக்காக 50 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் 

* சிறு தொழில் நிறுவனங்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தைரியம் கொடுக்கும் வகையில், ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவுடன் 30 பில்லியன் ரூபாய் கடன் வசதிகளை வழங்குவதற்கு நாம் செயற்பட்டு வருகின்றோம்.

* முந்தைய ஆண்டுகளில், சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்காக செலவழிக்கப்பட்ட பணத்தின் மூன்று மடங்கு 2024 ஆம் ஆண்டின் நிவாரணத்திற்காக செலவிடப்படும்.

* குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும் நகர்ப்புற வீட்டு வளாகங்களிலிருந்து வாடகை பெறுவது நிறுத்தப்படும். அந்த வீடுகளின் உரிமை குடியிருப்போருக்கு வழங்கப்படும்.

* கிராம நிலங்கள் விவசாயிகளின் தனிப்பட்ட உரிமைக்கு வழங்கப்படும். இதன் மூலம் இருபது லட்சம் குடும்பங்களுக்கு சொத்து கிடைக்கும். இதற்காக 2 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

* பெருந்தோட்ட வீடுகளை நிர்மாணிப்பதற்கான காணி உரிமைகளை வழங்குவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக 4 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* மிசவிய வேலைத்திட்டத்திற்கு 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

* 2024 ஆம் ஆண்டில் கொழும்பில் சுமார் 50,000 குடும்பங்களுக்கு வீட்டு உரிமை வழங்கப்படும். நிலம் மற்றும் வீட்டு உரிமைகள் முழுமையாக மக்களுக்கே வழங்கப்படுகின்றன. இந்த முறைப்படி இந்நாட்டு மக்கள் தொகையில் எழுபது வீதமானோர் காணி மற்றும் வீட்டு உரிமையாளர்களாக மாறுகின்றனர்.

* பெருந்தோட்ட மக்களுக்கு காணி வழங்கும் திட்டம்

* இயற்கை அனர்த்தங்களினால் சேதமடைந்த பாலங்கள் மற்றும் வீதிகளின் பராமரிப்புக்காக இரண்டு பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்

 * உயர்தர பரீட்சைக்கு தோற்றும் சகல மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்விக்கான வாய்ப்பு வழங்கப்படும்

* சென்னையிலுள்ள பல்கலைக்கழகத்தை இலங்கையில் ஆரம்பிக்க திட்டம். அதற்கான இந்தியா முழுமையான ஆதரவை வழங்குகின்றது.

* அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக மாகாணங்களுக்கு பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒழுங்குமுறை எதிர்வரும் ஆண்டு முதல் செயற்படுத்தப்படும்

4 புதிய பல்கலைக்கழகங்களை நிறுவுவ நடவடிக்கை. 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். உள்ளூர், வெளிநாட்டு மாணவர்கள் உயர் கல்வியைத் தொடர சிறந்த வழிவகை.

சகலருக்கும் ஆங்கிலம் 'திட்டத்துக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. 2034 ஆம் ஆண்டு சகலருக்கும் ஆங்கிலம் என்ற இலக்கு வெற்றிபெறும்

*நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலை மாணவர்களையும் உள்ளடக்கும் வகையில் 'சுரக்ஷா' மாணவர் காப்பீட்டுத் திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும்

* அரச துறையின் மாதாந்த சம்பளத்திற்காக 93 பில்லியன் ரூபா, காப்புறுதி, மருந்துகள், ஓய்வூதியம் உட்பட பொதுநல செலவுகளுக்கு 30 பில்லியன் ரூபா, கடன் வட்டி செலுத்த 220 பில்லியன் ரூபா என 03 பிரதான செலவுகளுக்காக மாத்திரம் அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் 383 பில்லியன் ரூபாவை செலவிடப்படும்

* நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலாத்துறைக்கு ஒதுக்குவது தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கை அல்ல, பரந்த நுவரெலியா அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு பகுதி என்பதை எடுத்துரைத்த ஜனாதிபதி, சுற்றுலாத்துறை போன்ற வெளிநாட்டுச் செலாவணி ஈட்டும் நோக்கங்களுக்காக வரலாற்று கட்டிடங்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

 சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், காலி தபால் அலுவலகம் போன்ற மற்ற வரலாற்று கட்டிடங்களும் இதேபோன்ற சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர் எச்சரித்தார்

* சிறு மற்றும் பெருங்குளங்கள் தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் புனரமைக்கப்படும். வீழ்ச்சியடைந்துள்ள விவசாயத்துறையை மேம்படுத்துவது பிரதான இலக்கு

* பயிரிடப்படாத நெல் நிலத்தில் மற்ற பயிர்களை வளர்ப்பதற்கான முன்மொழிவுகள்

*விவசாயத்தை நவீனமயமாக்கும் திட்டமானது பயிர்களை பல்வகைப்படுத்துவதற்கு பட்ஜெட்டில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நெல் உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய வேண்டும். இதற்காக 2500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

* தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான அனைத்து பண்ணைகளையும் திறம்பட பயன்படுத்தி தனியார் பங்களிப்புடன் 5 வருடங்களில் பால் உற்பத்தியை 53 வீதமாக அதிகரிக்க விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும்.

* சுற்றுலாப் பயணிகளுக்கு உள்ளூர் மற்றும் ஆயுர்வேத சிகிச்சைகளை வழங்குவதற்காக ஹோட்டல்களில் உள்ளூர் ஆயுர்வேத ஆயுர்வேத சிகிச்சை நிலையங்களை நிறுவ நூறு மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.

* நட்டமடையும் அரச நிறுவனங்களினால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே நட்டமடையும் அரச நிறுவனங்கள் நிச்சயம் மறுசீரமைக்கப்படும். குறுகிய அரசியல் நோக்கத்துக்காக எதிர்ப்பு தெரிவிப்பதை அரசியல் தரப்பினர் நாட்டுக்காக தவிர்த்துக்கொள்ள வேண்டும்

* சுற்றுலாப் பயணிகளுக்கு உள்ளூர் மற்றும் ஆயுர்வேத சிகிச்சைகளை வழங்குவதற்காக ஹோட்டல்களில் உள்ளூர் ஆயுர்வேத ஆயுர்வேத சிகிச்சை நிலையங்களை நிறுவ நூறு மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.

* வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மீள்குடியேற்றத்துக்காக 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

* யாழ்ப்பாணத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்கான அடிப்படை பணிகளுக்காக 250 மில்லியன் ரூபாய் வழங்கப்படவுள்ளது

* மகாவிகாரையின் வரலாறு மற்றும் பாத்திரங்களின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி மகா விகாரை பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு ஜனாதிபதி முன்மொழிகிறார். இத்திட்டத்தின் ஆரம்பப் பணிகளுக்காக 400 மில்லியன் ஒதுக்கப்படும்.

* பாடசாலை மட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த 1.5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

* வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகள் அமுலாக்கம், செலவு தொடர்பில் மாகாண சபைகள் பாராளுமன்றத்துக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும். 

 * பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன

 *பாலின அடிப்படையிலான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டமும் கொண்டு வரப்படுகிறது. 

* பொருளாதார நெருக்கடிக்கு தனித்து தீர்வுகாண முடியாது. அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துவேன்

* பண்டாரவளை பொருளாதார மத்திய நிலையத்தின் நிர்மாணம் மற்றும் உட்கட்டமைப்புக்கு 250 மில்லியன் ரூபா அரசாங்க பங்களிப்பாக ஒதுக்கப்படும்.

* திருகோணமலை நகரம் இந்திய முதலீடுகளுடன் அபிவிருத்தி செய்யப்படும். இதற்காக ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்படும்

* மாகாணசபை பட்ஜெட்டை அமல்படுத்தும் போது கடுமையான நிதி ஒழுக்கத்தை அமல்படுத்த வேண்டும்.

* புறக்கோட்டை, காலி, மாத்தறை, அநுராதபுரம், யாழ்ப்பாணம் போன்ற பெரு நகரங்களை அண்மித்த ரயில் நிலைய நகரங்களை நிர்மாணிப்பதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை அழைப்பதற்கான யோசனை

* சர்வதேச போக்குகளுக்கு ஏற்ப புதிய பொருளாதார அடித்தளத்தை அமைக்கும் வரவு செலவுத் திட்டமாகும். தேர்தல் வெற்றியை விட நாட்டின் வெற்றியே தனக்கு முக்கியம்

*  மோட்டார் போக்குவரத்து துறை 2024ல் டிஜிட்டல் மயமாக்கப்படும்

* மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான பகுதிக்கான பணிகள் சீனாவுடன் இணைந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

* மேல் மாகாணத்தில் மின்சார பஸ் சேவையை ஆரம்பிப்பதற்காக 200 பஸ்களை கொள்வனவு செய்ய திட்டம்.

* இலங்கையின் இரத்தினக்கல் தொழிற்துறையில் முழுத் திறனை அடைய மூன்று மாத சிறப்புத் திட்டம் 

* அரச நிதி முகாமைத்துவ சட்டமூலம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்

*வங்கி அமைப்பில் மூலதன மேம்பாட்டு செயல்முறையை ஆதரிக்க 450 பில்லியன்.

* 2032 ஆம் ஆண்டளவில் இலங்கையின் பொதுக் கடன் 95 வீதமாகக் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

* அரசுக்கு சொந்தமான இரண்டு வங்கிகளின் இருபது சதவீத பங்குகள் மூலோபாய முதலீட்டாளர்கள் அல்லது பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

* கடன் பெற்றுக்கொள்ளும் வரையறையை 3900 பில்லியன் ரூபாவிலிருந்து 7350 பில்லியன் ரூபா வரை 3450 பில்லியன் ரூபாவினால் அதிகரிக்க யோசனை முன்வைக்கப்படுகின்றது. ​

* கடன் பெறுவதற்கான வரம்பு 3900 பில்லியன் ரூபாயிலிருந்து 7350 பில்லியன் ரூபாயாக அதிகரிக்கப்படும்

* இரண்டு பெரிய அரசுக்கு சொந்தமான வங்கிகளில் 20% பங்குகளை மூலோபாய முதலீட்டாளர்கள் அல்லது பொதுமக்களுக்கு விற்கும் திட்டம்

* பொது நிதி நிர்வாகம் நல்லாட்சியின் கொள்கைகளை மேம்படுத்த புதிய சட்டங்களைக் கொண்டுவருகிறது. மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக நிலத்தின் பயன்பாட்டை அதிகப்படுத்த புதிய சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

* அம்பாந்தோட்டை, பிங்கிரிய, யாழ்ப்பாணம் உள்ளிட்ட தெரிவுசெய்யப்பட்ட மாவட்டங்களில் புதிய முதலீட்டு வலயங்கள் ஸ்தாபிக்கப்படும்

* மாகாண சுற்றுலா சபைகளின் அபிவிருத்திக்காக 750 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

* சுற்றுலாத்துறை தொடர்பான புதிய சட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கு ஒரு பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு. 

* 2024 வரவு செலவுத்திட்ட மூலதனச் செலவுக்கான ஒதுக்கீடு ரூ.1260 பில்லியனாக அதிகரிப்பு. இது மொத்தத் தேசிய உற்பத்தியில் 4% ஆகும். பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட திட்டங்களை நிறைவு செய்ய 55 பில்லியன் ரூபாய் மேலதிக ஒதுக்கீடு.

* காலநிலை மாற்ற ஆணைக்குழுவை விரைவில் நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

* எல்லை தாண்டிய பரிவர்த்தனைகள், பணம் செலுத்தும் முறைகள், நிதி வருவாய் மற்றும் பணியாளர் நலன் ஆகியவற்றை உள்ளடக்கிய கிக் பொருளாதாரம் மற்றும் மின்-வணிக பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்கு எளிய கொள்கை மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பை அறிமுகப்படுத்த ஜனாதிபதி விக்கிரமசிங்க முன்மொழிந்தார்.

* சர்வதேச காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காக கொத்மலை நீர்த்தேக்கத்துக்கு அருகில் 600 ஏக்கர் காணி ஒதுக்கீடு.

* உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை நுகர்வோருக்கு தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கும் 250 மில்லியன் ஒதுக்கீடு

* 2024 வரவுசெலவுத்திட்ட உரையை நிறைவு செய்தார் ஜனாதிபதி

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!