இலங்கையின் எழுச்சிக்கு உதவும் வகையில் வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது - ரஞ்சித்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
#budget
#Ranjith Siambalapitiya
Thamilini
2 years ago
பல சவால்களுக்கு மத்தியில் குறுகிய காலத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்று நீண்ட கால அடிப்படையில் இலங்கையின் எழுச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு உதவும் வரவு செலவுத் திட்டம் நாளை (13.11) சமர்ப்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சு வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தலை இலக்கு வைத்து தீர்வுகள் வழங்கப்பட மாட்டாது எனக் கூறினார்.
பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடையாத நிலையான வேலைத்திட்டம் முன்வைக்கப்படும் எனவும் அவர்தெரிவித்தார்.