பிரான்ஸில் போதைப்பொருளை மறைத்து எடுத்துச் சென்ற பயணி
#Arrest
#France
#Airport
#world_news
#drugs
#Smuggling
Prasu
1 year ago

பிரான்ஸில் போதைப்பொருளை மறைத்து எடுத்துச் சென்ற பயணி ஒருவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது.
60 வயதுடைய ஒருவர் பெரு நாட்டில் இருந்து சாள்-து-கோல் விமான நிலையத்தினை வந்தடைந்தார்.
அவர் 21 கிலோ எடையுடைய கொக்கைன் போதைப் பொருளை மறைத்து எடுத்துச் சென்ற நிலையில், சுங்கவரித்துறையினரால் கைது செய்யபப்ட்டார்.
Lima (Peru) நகரில் இருந்து வருகை தந்த குறித்த நபர், இங்கிருந்து Barcelona (Spain) நகருக்குச் செல்லும் விமானத்துக்காக காத்திருந்த நிலையிலேயே சுங்கவரித்துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர், நவம்பர் 3 ஆம் திகதி அவருக்கு பொபினி குற்றவியல் நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.



