14 மணி நேரத்தில் 800 முறை நிலநடுக்கம் - ஐஸ்லாந்தில் சம்பவம்

#people #world_news #Earthquake #Warning #European #Iceland
Prasu
1 year ago
14 மணி நேரத்தில் 800 முறை நிலநடுக்கம் - ஐஸ்லாந்தில் சம்பவம்

ஐஸ்லாந்தின் தென் மேற்கு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் தொடர்ந்து சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. 14 மணி நேரத்தில் சுமார் 800 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் மிகப்பெரிய நிலநடுக்கமாக கிரைண்டா விக்குக்கு வடக்கே 5.2 ரிக்டர் அளவாக பதிவானது. இந்த நிலநடுக்கங்கள் எரிமலை வெடிப்புக்கு முன்னோடியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

இதையடுத்து அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்கங்கள் காரணமாக உலக புகழ்பெற்ற சுற்றுலா தரமான புளூ லகூன் மூடப்பட்டது.

 நிலநடுக்கம் எரிமலை வெடிப்பு காரணமாக மக்கள் பாதுகாப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஐஸ்லாந்தில் 33 எரிமலைகள் உள்ளன. இது ஐரோப்பில் உள்ள நாடுகளில் அதிக எண்ணிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!