தீபாவளி தீபத்திருநாள் நாளை மலர்கிறது. அனைவர் உள்ளங்களிலும் ஒளிசேரட்டும் - மறவன்புலவு க. சச்சிதானந்தன்
மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுதுகிறேன் ஊடகத்தாருக்கு நாளை தீபாவளி நாள். இந்துக்களின் விழா நாள். இந்துக்கள் அனைவரின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் ஒளி சேரும் நாள்.
இந்துக்களின் கொடி நந்திக்கொடி. விடுதலை பெற்ற இலங்கையின் வரலாற்று நாள். கடந்த ஆண்டு இதே தீபாவளி நாள். குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் நந்திக் கொடிகள் பறந்தன.
குடியரசுத் தலைவர் மேதகு இரணில் அவர்களுக்கு இந்துக்கள் நன்றி சொன்னார்கள். நல்லூரில் அரசு வளாகத்தில் நந்திக்கொடி 400 ஆண்டுகளுக்கு முன்பு பறந்தது. அதே நந்திக்கொடி கடந்த ஆண்டு தீபாவளி விழா நாளிலும் இந்த ஆண்டு விழா தீபாவளி நாளிலும் கொழும்பில் இலங்கை குடியரசுத் தலைவர் வளாகத்தில், அரசின் ஆட்சி வளாகத்தில் பறக்கிறது.

இந்துக்களுக்கு இலங்கை அரசமைப்பில் முன்னுரிமை கொடுக்க, சிவ சேனை கோருகிறோம். அக் கோரிக்கையை ஏற்பதற்கான கட்டியம் கூறுகிறார் குடியரசுத் தலைவர்.
தன் அலுவலகத்தில் நந்திக்கொடியை ஏற்றினார்.
இலங்கையில் ஏறத்தாழ 30 லட்சம் இந்துக்கள் வாழ்கிறோம்.
இலங்கை அரசுக்கும் குடியரசுத் தலைவர் மேதகு இரணில் விக்ரமசிங்கர் அவர்களுக்கும் நன்றி சொல்கிறோம்.
இலங்கை இந்துக்கள் நன்றி சொல்கிறோம்.