இலங்கையில் விளையாட்டுத்துறைக்கு புதிய பல்கலைக்கழகம்!
#SriLanka
#sports
#University
PriyaRam
2 years ago
இலங்கையில் 2024 ஆம் ஆண்டு புதிய விளையாட்டுத்துறைக்கு பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹண திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கு சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என நம்பப்படுவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உள்ளிட்ட பல நிறுவனங்களின் அனுமதியைப் பெற்று 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அதன் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.