இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டமை திடீரென எடுக்கப்பட்ட முடிவு அல்ல : ஐ.சி.சி அதிகாரிகள்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#ICC
Thamilini
2 years ago
இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டமை நேற்று திடீரென எடுக்கப்பட்ட முடிவு அல்ல என சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் முதல் இலங்கையின் நிலைமையை உன்னிப்பாக அவதானித்தே மேற்படி முடிவெடுத்துள்ளதாக ஐ.சி.சியின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், நடந்த சம்பவத்தால் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மிகவும் வருத்தமடைந்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை கிரிகெட் சபை அதன் விவகாரங்களை சுதந்திரமாக நிர்வகிப்பதற்கும், அரச நிர்வாகத்தின் ஒழுங்குமுறை அல்லது நிர்வாகத்தில் அரசாங்கத்தின் தலையீடு இல்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கும் ஒரு உறுப்பினராக இலங்கை கிரிக்கெட்டின் தேவையை கடுமையாக மீறியுள்ளது என ஐ.சி.சி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.