பாகிஸ்தானில் ஒரே இரவில் மாறிய மீனவரின் வாழ்க்கை!
#SriLanka
#world_news
#Pakistan
#Lanka4
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் உள்ள ஹாஜி பலூச் என்ற மீனவர், ஒரே இரவில் கோடிஸ்வரராகியுள்ளார்.
குறித்த மீனவர் அரபிக்கடல் பகுதியில் இருந்து தங்க மீன் என்றும் அழைக்கப்படும் ‘சோவா’என்ற மீனை பிடித்துள்ளனர்.
குறித்த மீனானது ஒரே நாளில் 07 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக குறித்த மீனவரானவர் ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறியுள்ளார்.
சோவா மீன் அரிதாகக் கருதப்படுகிறது, ஏனெனில் அதன் வயிற்றில் உள்ள பொருட்கள் சிறந்த மருத்துவ குணங்களைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. குறித்த மீனானது ஏலத்தில் ஒரு மீன் 70 இலட்சம் ரூபாயாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.



