15 வருடகால வழக்கிற்கு தீர்வு வழங்கிவைத்த ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா அவர்கள்

#SriLanka #Attack #Pakistan #President #BombBlast #release #sri lanka tamil news #Lawyer
Prasu
2 years ago
15 வருடகால வழக்கிற்கு தீர்வு வழங்கிவைத்த ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா அவர்கள்

ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா அவர்கள் ஆஜரான பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதாகி தடுத்து வைக்கப்பட்ட மூவர் இன்று (10/11/2023) விடுதலை. சந்தேகநபர்கள் சார்பில் சட்டத்தரணி திரு.கே.வி.தவராசா அவர்கள் நீண்டகாலமாக முன்னிலையாகி வந்தார்.

இலங்கைக்கான முன்னாள் பாகிஸ்தான் தூதுவராக இருந்த பசீர் அலி மொஹமட் என்பவரை கொலை செய்ய முயன்றமை, அதற்கு சதி செய்தல் மற்றும் உதவி செய்தமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் குற்றம் சுமத்தப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் நீண்ட விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் அவர்களின் மகன் ரஞ்சன் எனப்படும் கனகரத்தினம் ஆதித்தன், ஸ்டார்ஸ் எனப்படும் யோகராஜா நிரோஷன் மற்றும் முச்சக்கரவண்டி சாரதி சுப்ரமணியம் சோதிராஜா ஆகியோரே விடுவிக்கப்பட்டனர்

அண்மைய இலங்கை நீதித்துறை வரலாற்றில் 15 வருடங்களாக தடுப்புக்காவலில் இருந்து, நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட கைதியாக கனகரத்தினம் ஆதித்தன் குறிப்பிடப்படுகிறார். 

2009 இல் கைது செய்யப்பட்டது முதல் இன்று விடுதலையாகும் வரை அவர் தடுப்புகாவல் கைதியாகவே வைக்கப்பட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!