மதுவினால் உடலிற்கு உண்டாகவல்ல நன்மைகள் இவை

#Health #Benefits #Body #Lanka4 #liquor #ஆரோக்கியம் #உடல் #லங்கா4
Mugunthan Mugunthan
6 months ago
மதுவினால் உடலிற்கு உண்டாகவல்ல நன்மைகள் இவை

மது உயிரை குடிக்கும் என்பார்கள். ஆனால் அளவான மது பழக்கம் உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரித்து இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. 

மதுவை அளவாக எடுத்துக்கொள்வதால் மேலும் பல நன்மைகள் கிடைக்கிறது.

 ஒட்கா மற்றும் வயின் இவை இரண்டும் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு உதவும் மதுக்கள் ஆகும். இவற்றில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதயத்தின் இரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பை தடுக்க உதவும்.

 ஆய்வுகளின் படி மிதமான மதுபழக்கம் ஆண்களின் பாலியல் ஹோர்மோன் உற்பத்திக்கு உதவுகிறது. ஆரோக்கியமான தாம்பத்திய உறவுக்கு மிதமான குடிப்பழக்கம் உதவும். எனினும் அது அதிகமானால் ஆண்மைக்குறைவு ஏற்படும்.

 அளவாக மதுவை உதாரணத்திற்கு சிவப்பு வயின் எடுத்துக்கொள்வது உங்கள் நினைவாற்றல் மேம்பாட்டிற்கு உதவும். வயின் திராட்சையின் தோலில் காணப்படும் ரெஸ்வெட்ரோல் நினைவாற்றல் மேம் பாட்டிற்கு உதவும்.

images/content-image/1698164062.jpg

 சிவப்பு வயினில் உள்ள ரெஸ்வெராட்ரோல் உயிரணுக்களின் வாழ்வைக் கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது. இது உயிரணுக்களின் நீண்ட வாழ்விற்கு வழிவகுத்து மனிதர்களின் ஆயுட்காலத்திற்கு உதவுகிறது.

 வலுவான எலும்புகளுக்கு மதுவின் ஒரு வகையான பீரில், அதிக அளவு சிலிக்கன் உள்ளது. இது அடர்த்தியான ஆரோக்கியமான எலுமபுக்கு வழி வகுக்கிறது. எனவே, நாள் ஒன்று 1-2கிளாஸ் பியர் குடிப்பது எலும்புக்கு நல்லது.

 குறிப்பாக நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு 40 வீதம் வரை குறைவதற்கும் அதில் பியர் குடிப்பவர்களுக்கு சர்க்கரை நோயின் அபாயம் குறைகிறது.