கனடா வெளியுறவு அமைச்சர் இஸ்ரேலுக்கு பயணமானார்
#Canada
#Minister
#Israel
#Lanka4
#லங்கா4
#Foriegn
#Canada Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
2 years ago
கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி இஸ்ரேலுக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்தியதனை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையில் கடுமையான முரண்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது.
இஸ்ரேலுக்கு கனடாவின் பூரண ஆதரவினை வெளிப்படுத்தும் நோக்கில் கனடிய அமைச்சர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். ஹமாஸ் தாக்குதல்களினால் இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் மெலனி, இஸ்ரேலிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

கடந்த வாரம் இடம்பெற்ற சம்பவங்கள் அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் உள்ளிட்ட அமெரிக்க முக்கியஸ்தர்கள் சிலரும் இஸ்ரேலுக்கு திடீர் விஜயங்களை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.