பலஸ்தீன - இஸ்ரேல் யுத்தம் : கனடா மதவழிபாட்டுத்தலங்களுக்கு விசேட பாதுகாப்பு
#Police
#Canada
#worship
#Lanka4
#ஆலயம்
#பொலிஸ்
#லங்கா4
#Security
#Canada Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
2 years ago
கனடாவில் மத வழிபாட்டுத்தலங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படும் மத வழிபாட்டு தலங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவிக்கின்றனர்.
இஸ்ரேல் பாலஸ்தீன போர் பதற்ற நிலைமைகளின் பின்னணியில் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக யூத மத வழிபாட்டு தலங்களும் இஸ்லாமிய மத வழிபாட்டுத் தலங்களும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மத வழிபாட்டு தலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் விசேட பொலீஸ் ரோந்து படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குரோத உணர்வை தூண்டும் வன்முறைகளுக்கு இடமளிக்கப்படாது என கனடிய பொலீசார் தெரிவிக்கின்றனர்.