பிரான்ஸில் அதிகரிக்கும் மின்சாரம் மற்றும் எரிவாயு விலைகளால் வெதுப்பகங்கள் பாதிப்பு
#France
#Power
#Lanka4
#லங்கா4
#Gas
#பிரான்ஸ்
#France Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
2 years ago
மின்சாரம் மற்றும் எரிவாயுக் கடட்ணங்களின் அதியுச்சக் கட்டண அதிகரிப்பு பல துறைகளைப் பாதித்துள்ளது.
இதில் வெதுப்பகங்கள் (boulangeries) மிக முக்கியமானவை. பல வெதுப்பகங்கள் தொடர்ந்து நடத்த முடியாமல் மூடப்பட்டு வருகின்றன.
உதாரணத்திற்கு Morbihan மாவட்டத்திலுள்ள Faouët நகரத்தில் 10 வெதுப்பகங்களில் 4 மூடப்பட்டுள்ளன. அதில் இரண்டு இந்த வருடத்தில் மூடப்பட்டுள்ளன.
திறந்திருக்கும் வெதுப்பகங்களும் பாண்களின் விலைகளை அதிகரிக்கும் கட்டாயத்திற்கு உள்ளாகி உள்ளன.
இந்த நிலை நாடு முழுவதும் பரவி உள்ளது. வெதுப்பகங்கள் மூடப்படுவதுடன் பாண் விலைகளும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.