கனடாவின் ஒட்டாவாவில் வெப்பநிலை சாதனை படைத்துள்ளது
#Canada
#Lanka4
#heat
#வெப்பமயமாதல்
#லங்கா4
#WorldRecord
#Canada Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
2 years ago
ஒட்டாவாவில் 132 ஆண்டுகளின் பின் வெப்பநிலை தொடர்பில் சாதனை பெறுதி பதிவாகியுள்ளது.
விமான நிலையத்தில் நேற்றைய தினம் 30.6 பாகை செல்சியஸாக வெப்பநிலை காணப்பட்டது.
இது 1891 ஆம் ஆண்டு பதிவான 29.4 பாகை செல்சியஸ் என்ற பெறுதியை விடவும் அதிகமாகும் அதாவது 132 ஆண்டுகளின் பின்னர் வெப்ப நிலையில் சாதனை நிலை நாட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் காலநிலையில் மாற்றம் பதிவாகும் என தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக சனிக்கிழமை அளவில் மழை பெய்யவும் சாத்தியமுண்டு என கனடிய சுற்றாடல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
எதிர்வரும் வாரங்களில் காலநிலையில் பாரிய மாற்றம் பதிவாகும் எனவும் குளிருடனான காலநிலை ஆரம்பமாகும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.