கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் பணியாளர் ஊதியம் அதிகரிப்பு
#Canada
#Province
#Lanka4
#அதிகம்
#ஊதியம்
#Salary
#லங்கா4
#Canada Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
1 year ago

ஒன்றாரியோ மாகாணத்தில் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மாகாணத்தில் சுமார் ஒரு மில்லியன் பணியாளர்கள் பேர் இன்றைய தினம் சம்பள அதிகரிப்பினை பெற்றுக்கொள்கின்றனர்.
இன்றைய தினம் முதல் குறைந்தபட்ச சம்பளம் சுமார் ஏழு வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி சம்பளம் மணித்தியாலம் ஒன்றுக்கு 16.55 டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் வாராந்தம் 40 மணத்தியாலங்கள் வேலை செய்யும் பணியாளர் ஒருவர் சுமார் 2200 டொலர்களை சம்பள அதிகரிப்பாக பெற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்றாரியோவில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களும் இந்த சம்பள அதிகரிப்பிற்கு தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது



