இன்று பிரான்ஸில் தொடருந்து ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்தத்தில்....சேவை பாதிப்பு
#France
#strike
#Employees
#Lanka4
#Train
#இன்று
#லங்கா4
#பிரான்ஸ்
#France Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
2 years ago
.இன்று செப்டம்பர் 26 ஆம் திகதி தொடருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
பல்வேறு போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட உள்ளன. தொடருந்து தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் சமூக கொடுப்பனவுகள் போன்றவற்றைக் கோரி இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளது.
பல்வேறு RER மற்றும் Transilien சேவைகள் பாதிக்கப்பட உள்ளன.
RER C, RER D, RER E ஆகிய தொடருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டே இயங்கும். N வழி Transilien சேவைகளும் பாதிக்கப்பட உள்ளன.
CGT-Cheminots, SUD-Rail மற்றும் CFDT-Cheminots ஆகிய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.