ரஷ்ய போருக்கு பிறகு முதன்முறையாக கனடா சென்ற ஜெலன்ஸ்கி

#Canada #Meeting #Ukraine #Zelensky #Visit
Prasu
9 months ago
ரஷ்ய போருக்கு பிறகு முதன்முறையாக கனடா சென்ற ஜெலன்ஸ்கி

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷியாவிற்கு எதிராக மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடிவருகிறார். உலக நாடுகளில் இருந்து ரஷியாவை தனித்துவிட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். 

இதனால் மேற்கத்திய நாடுகளுக்கு நேரடியாக சென்று உதவிகளை நாடி வருகிறார். கடந்த சில நாட்களாக ஐ.நா. சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டு பேசினார். 

அப்போது, ஐ.நா.வில் இன்னும் ரஷியாவிற்கு இருக்கை கொடுத்திருப்பது குறித்து கேள்வி எழுப்பினார். மேலும், வெறுப்பு ஆயுதமாகும்போது, அது ஒரு நாடுடன் நிற்காது என்று எச்சரித்தார். இந்த கூட்டத்தில் கனடா, உக்ரைனுக்கு ஆதரவாக பேசியது. 

கனடா அதிபர் ட்ரூடோ, எரிபொருள் மற்றும் உணவை ஆயுதமாக்குகிறது என ரஷியா மீது குற்றம்சாட்டினார். இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கனடா செல்கிறார். 

கனடா செல்லும் அவர், இன்று அங்குள்ள பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார். 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷியா தாக்குதலை தொடங்கியது. 

அதன்பின் தற்போது முதன்முறையாக ஜெலன்ஸ்கி கனடா செல்கிறார். இதற்கு முன்னதாக வீடியோ கான்பெரன்ஸ் மூலம் கனடா பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார்.