துபாய்க்கு செல்லும் வியாபாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் (நேரடி ரிப்போர்ட்)

#Police #world_news #Lanka4 #பொலிஸ் #லங்கா4 #Dubai #Bussinessman
Mugunthan Mugunthan
9 months ago
துபாய்க்கு செல்லும் வியாபாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் (நேரடி ரிப்போர்ட்)

 உலகில் பெரிய வர்த்தக சந்தை என்றால் அனைவராலும் கூறப்படும் ஒரு நாடு துபாய் ஆகும். 

சீனாவுக்கு அடுத்தபடியாக அனைத்துப் பொருட்களையும் உலக நாடுகள் மொத்தமாக கொள்வனவு செய்வதும் நாடுகள் தமது பொருட்களை பெரிய அழவில் விற்க நாடும் நாடும் துபாய்தான். 

 துபாய் நாட்டுக்கு நண்பர்களும் பகைவர்களும் இல்லை என்றே சொல்லலாம். வானுயர்ந்த கோபுர அடுக்கு மாடிகள் சாரதி இல்லாத கூலி ராக்சிகள், கண்ட இடமெல்லாம் வானத்தில் இருந்தி கொட்டியதுபோல தங்க நகை கடைகளில் குவிக்கப்பட்டிருக்கும் நகைகள் ஒரு புறம் பாதிக்கப்பட நாட்டவர்கள் அனேகமானோர் சட்ட பூர்வமாகவும், சட்ட விரோதமாகவும் பணம் உழைக்கும் நாடும் துபாய் நாடுதான். 

images/content-image/1695367778.jpg

 இதற்கிடையில் பாதுகாப்பும் பலமாக இருக்கும் நாட்டில் கண்ட மூலைக்கெல்லாம் பாதுகாப்புக் கமெராக்கள். மற்றும் சீருடையில் நடமாடும் பாதுகாப்பு காவல் அதிகாரிகளை விட இரகசியப் பொலீசாரின் எண்ணிக்கை அதிகமாம். 

 இவை எல்லாமே சிறப்புத்தான். இருப்பினும் துபாயிலேயும் கட்டுப்படுத்த முடியாதவாறு. போலி புலனாய்வுப் பிரிவும் உலாவுவதும் அவர்களில் பலர் பிடிபடுவதும் திரை மறைவில் நடக்கும் ஒரு நிகழ்வாகிவிட்டது.

 அவர்கள் சட்ட விரோதமாக நாணையப் பரிமாற்று செய்பவர்களை இனம் கண்டு அவர்களிடம் தாம் புலனாய்வுப் பிரிவு என பொய்யாக கூறி சட்ட விரோத வியாபாரிகளை வாகனத்தில் ஏறும்படியம் பொலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்வதாக கூறி பிறிதொரு மறைவான இடத்தி வைத்து அவர்களிடம் உள்ள பணம், பொருள், கை தொலைபேசி அனைத்தைதும் கொள்ளையிடிகின்றனர்.

 இதை செய்பவர்களில் அதிகமானோர் துபாயிற்க்கு அருகில் இருக்கும் வறிய அரபு நாட்டு நபர்கள் என அனேகராலும் கூறப்படுகிறது. எகிப்த்து, லெபனான் வாசிகளே அதிகமாக இப்படியான கொள்ளையர்களெனவும், கொள்ளையிட்டவுடனேயே எல்லையை கடந்து தமது நாட்டுக்கோ அல்லது அயல் நாட்டுக்கோ தப்பி சென்று பின்னர் வேறு பெயரில் மீண்டும் சில மாதங்களின் பின்னர் பிரிதொரு இடத்தில் மீண்டும் தமது கை வரிசையை காட்டுகின்றார்களாம். 

images/content-image/1695382786.jpg

 ஆம் எம் உறவுகளே இதுபோல பல நாடுகளில் நடந்தாலும் துபாய் போன்ற நாடுகளில் இப்படி நடப்பது நாட்டின் எதிகாலத்துக்கும் நம்பி வசிக்கவோ, வியாபாரத்துக்கோ செல்லும் மக்களிற்க்கு ஒரு ஐயப்பாட்டை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

 இதன் சாட்சியாக அல்லது ஒரு எடுத்துக்காட்டாக 21-09-2023 வியாழன் அன்று ஒரு இலங்கை வியாபாரி துபாயில் நெருக்கமான வியாபார ஸ்தாபனத்துக்கு முன்பாக வைத்து போலி புலனாய்வு நபர்களால் கடத்தப்பட்டு அவர் கையில் இருந்த 92000 அமெரிக்க டாலர்களும் அவரது பல தகவல் அடங்கிய கைதொலைபேசியும் கொள்ளையிடப்பட்டுள்ளது. 

images/content-image/1695367816.jpg

 பறி கொடுத்த வியாபாரி துபாய் பொலீசில் முறைப்பாடு செய்து பொலீசார் கொள்ளையர்களை தேடி வருகிறது. இச் செய்தியை அவரது வியாபார இணையரால் lanka4 ஊடகத்துக்கு பிரத்தியேகமகக் கூறப்பட்ட விடயமாகும். 

 இதன் விடயமாக சுவிஸ் இல் வியாபார நோக்கோடு வந்த நபர் உடனடியாக இன்று இரவு துபாய் திரும்பியுள்ளார். கொள்ளையர்கள் விரைவில் பொலீசாரால் கைது செய்யப்படுவார்கள் என நம்பிக்கையோடு இந்த வியாபாரி செல்கிறார்.

 கொள்ளையர்கள் பிடிபட்டார்களா? இல்லையா என்பதை லங்கா4 ஊடகம் விரைவில் வெளியிடும். ஆம் lanka4 வாசகர்களே இப்படியான உண்மை செய்திகளை அறிய எம்மோடு தொடர்ந்து இணைந்து இருங்கள். உங்கள் ஆதரவுக்கு நன்றிகள். 

 செய்தி:- செல்வா சுவிஸ்