உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய அமெரிக்க குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நடந்த மரணம்

#Death #CHILDREN #America #Pain #Medicine
Prathees
2 months ago
உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய அமெரிக்க குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நடந்த மரணம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் வலி நிவாரணியான ஃபெண்டானில் (Fentanyl) மருந்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் ஒரு வயது குழந்தை உயிரிழந்ததுடன் மேலும் மூன்று குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 இது தொடர்பாக, சிறுவர் பராமரிப்பு நிலையத்தின் உரிமையாளரான பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரது கணவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

 இறந்த குழந்தை ஃபெண்டானில் என்ற வலி நிவாரணி மருந்தை அளவுக்கு அதிகமாக சுவாசித்தது தெரியவந்துள்ளது. குழந்தைகள் தூங்குவதற்கு பயன்படுத்தப்படும் மெத்தையின் கீழ் ஃபெண்டானில் என்ற மாத்திரையை பொலிசார் கண்டுபிடித்தனர்.

 ஃபெண்டானில், ஹெராயினை விட 50 மடங்கு வலிமையான ஒரு செயற்கை வலி நிவாரணி என்கிறார்கள். 

 பின்னர், இந்த குழந்தை பராமரிப்பு மையத்தை சோதனை செய்தபோது, ​​அங்கு ஒரு கிலோ ஃபெண்டானில் கண்டுபிடிக்கப்பட்டது, 

இது 500,000 பேரைக் கொல்லக்கூடும் என்று பொலிசார் தெரிவித்தனர். எனினும் இது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என சிறுவர் பராமரிப்பு நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 

 அவரது அழைப்புகளுக்குப் பிறகு, அவரது கணவர் குழந்தை பராமரிப்பு மையத்திற்கு வந்து அங்கிருந்து சில பைகளை எடுத்துச் சென்றது சிசிடிவி காட்சிகளில் உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர். 

 ஃபெண்டானில் வலிநிவாரணி மாத்திரைகள் பாவனையால் நாட்டில் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு