தொடர்ந்து போஸ்டரை வெளியிட்டு வரும் லியோ படக்குழு!

#Cinema #Tamil-Cinema #2023 #Vijay #Tamilnews #Breakingnews #ImportantNews #Movies #Movie
Mani
2 months ago
தொடர்ந்து போஸ்டரை வெளியிட்டு வரும் லியோ படக்குழு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லியோ’ செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி மற்றும் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'லியோ' திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், படக்குழுவினர் போஸ்டர்களை வெளியிட்டு வைபை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், படத்தின் இந்தி போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய்யும் சஞ்சய் தத்தும் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு